Thu. Nov 20th, 2025



பாப்பிரெட்டிப்பட்டி, அக். 25:
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வி. வேலு மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியத்தின் A. பள்ளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லாத்துக்காடு பகுதியில், கனமழையால் காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் சேதமடைந்தது.

தகவல் அறிந்ததும், தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

அவர், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களின் கவனத்திற்கு விவரத்தை எடுத்துச் சென்று, சேதமடைந்த தரைப்பாலம் விரைவில் சீரமைக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் சி. முத்துக்குமார், மற்றும் கழக சார்பு அணிகள் நிர்வாகிகள் சர்மா, சேரன், அருள், மாது, கோகுல், நிஷாந்த், நிதிஷ், ஐடி விங் சக்தி ஆகியோர் உடனிருந்தனர்.

மண்டல செய்தியாளர்: D. ராஜீவ்காந்தி

By TN NEWS