குடியாத்தம், அக்டோபர் 25:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டையைச் சேர்ந்த செருவங்கி பெரிய ஏரி தொடர்ச்சியான மழையால் தற்போது முழுக் கொள்ளளவை எட்டி, ஏரி கரையோரம் நீர் வழிந்தோடுகிறது.
இந்தச் சிறப்பை முன்னிட்டு வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் இராசி தலித் குமார் மலர் தூவி ஏரி நீரை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஏரியில் நீர்மட்டம் முழு கொள்ளளவுக்கு வந்திருப்பதற்காக உழைத்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கபடி கழக நடுவர் சிவராமன், அஜய் ஜெயேந்திரன், எவரெஸ்ட் கபடி கழக விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்
