Thu. Nov 20th, 2025

சாம்பவர்வடகரையில் வெறிநாய் கடித்ததில் ஒருவர் பலி
தென்காசி மாவட்டம் — அக்டோபர் 17, 2025

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி 12ஆம் வார்டு, வேலாயுதபுரம் ரோட்டில் வசித்து வந்த காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மாரியப்பன் (சங்கரன் மகன்) என்பவர், இருபது நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வெறிநாய் கடித்ததாகத் தெரியவந்துள்ளது.

அவர் முதலில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம், மாவட்டத்தில் தெருநாய்களின் தொல்லை மீண்டும் தீவிரம் அடைந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🖋️தகவல் வழங்கியவர்:
ஜெ. அமல்ராஜ்,
மாவட்ட தலைமை நிருபர்,
தென்காசி மாவட்டம்.

By TN NEWS