தருமபுரி மாவட்டம், அரூர் திருவிக நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநில தலைவர் பசுமை சீனிவாசன் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு “Z” அளவிலான பாதுகாப்பு வழங்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“தொல். திருமாவளவன் அவர்கள் தென்னிந்தியாவின் இலட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை பெற்ற அரசியல் தலைவர். அவர் எங்கு சென்றாலும் பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடுகின்றனர். எனவே, அவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘Z’ பாதுகாப்பு வழங்குவது அவசியம்,” என கூறினார்.
இந்நிகழ்வில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
செய்திகள்: பசுபதி
