சென்னை, அக்டோபர் 6:
போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், ஆவடி மாநகர காவல்துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ஆவடி மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும், ஆவடி காவல் ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், SRMC சரக உதவி ஆணையாளர் அவர்களின் மேற்பார்வையில், மௌலிவாக்கம் காவல் ஆய்வாளர் திரு. ஜி. லாரன்ஸ் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மௌலிவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொளப்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.
அதேபோல், பள்ளி வளாகங்களுக்கு அருகாமையில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுப்பது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகளை விளக்கும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணியிலும் பங்கேற்று, “போதை இல்லா சமூகம் உருவாக்குவோம்” என்ற கோஷங்களுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தகவல்: உ. விக்னேஷ்வர்
செய்தியாளர் – சென்னை