Sun. Oct 5th, 2025



வேலூர் மாவட்டம், குடியாத்தம் (அக்டோபர் 1):
புதிய நீதி கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75வது பிறந்தநாள் விழா குடியாத்தம் பிச்சனூர் பேட்டை அரசமரம் அருகில் இனிப்புகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர் மு. பாபு தலைமையேற்று கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராம இளங்கோவன், அம்பேத்கர் பேரவை மண்டலச் செயலாளர் நத்தம் ஆர். நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர் டி. பிரிவின் குமார், கொண்டசமுத்திரம் ஒன்றியத் தலைவர் ஜி. குமரவேல், ஒன்றியச் செயலாளர் எஸ். சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், புதிய நீதி கட்சி மாவட்டத் தலைவர் ஆர். இளஞ்செழியன், செருவங்கி ஜெயகோபி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

🖋️ குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS