Sun. Oct 5th, 2025



தென்காசி மாவட்டம், புளியங்குயில்:
SDPI கட்சியின் வாசுதேவநல்லூர் தொகுதி BLA-1 பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் புளியங்குயிலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு தொகுதி தலைவர் அப்துல்ஹமீது தலைமையேற்றார். வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், புளியங்குடி மற்றும் பாம்புக்கோயில் சந்தை நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது மக்மூத், மாவட்ட செயலாளர் நூர்முகம்மது ஆகியோர் பங்கேற்று, தொகுதிக்குட்பட்ட பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும், கூட்டத்தில் கரூர் பெருந்துயரில் உயிரிழந்த அனைவருக்கும் SDPI சார்பில் இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

🖋️ அமல்ராஜ்,
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்

By TN NEWS