தருமபுரி மாவட்டம், மொரப்பூர்:
கம்பைநல்லூர் அடுத்துள்ள கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்காக புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த விழாவில், பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, திருக்குறள், பழமொழி, பொது அறிவு, ஆங்கில அகராதி, நன்னெறிக் கதைகள் உள்ளிட்ட நூல்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.
ஒவ்வொரு மாணவரும் ரூ.200 முதல் ரூ.700 வரையிலான தொகையில் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கினர். இதனால் மொத்தம் ₹13,000 க்கு மேற்பட்ட மதிப்பிலான புத்தகங்கள் மாணவர்களின் கைகளில் சென்றடைந்தன. “எங்கள் செலவினம் முழுவதையும் புத்தகங்களுக்கே பயன்படுத்தினோம்” என மாணவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் உண்டியல் மற்றும் மரக்கன்று வழங்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு பழக்கம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாணவர்களுடன் பாதுகாப்பாகச் சென்று வழிகாட்டிய ஆசிரியர்கள்:
சி. தீர்த்தகிரி (கணிதப் பட்டதாரி, உதவி தலைமை ஆசிரியர்)
வெ. ஆறுமுகம் (அறிவியல் பட்டதாரி)
கி. பாலாஜி (ஆங்கில பட்டதாரி)
சி. இரமேஷ் (உடற்கல்வி ஆசிரியர்)
கோ.வ. லக்ஷ்மி (கணினி ஆசிரியர்)
சௌ. கார்த்திகா, க.தேவி (மழலையர் கல்வி, தற்காலிக நியமனம்)
விழாவை முன்னிலை வகித்த பள்ளித் தலைமை ஆசிரியர் ச. சாக்கம்மாள், பங்காற்றிய அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
🖋️ பசுபதி,
தலைமை செய்தியாளர்