தருமபுரி மாவட்டம், அக்டோபர் 1:
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நாட்டு நலப்பணி (NSS) திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று (01.10.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு யோகா மற்றும் தியானம் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், வாழ்க்கைத் திறன் மேம்பாடு மற்றும் டி.என்.பிசி. தேர்வுக்கான விழிப்புணர்வு குறித்து நல்லாசிரியர் பழனிதுரை மாணவர்களுக்கு வழிகாட்டினார்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமையேற்றார். திட்ட அலுவலர் கதிரேசன், ஆசிரியர்கள் சக்திவேல் மற்றும் பலரும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
முகாமின் நிறைவில் சேகர் நன்றியுரை வழங்கினார்.
🖋️ பசுபதி,
தலைமை செய்தியாளர்