Sun. Oct 5th, 2025



குடியாத்தம், செப்.28:
கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் குடியாத்தம் நகரில் நடைபெற்றன.

திமுக மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் குடியாத்தம் நகரம் பழைய பேருந்து நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன், நகர கழகச் செயலாளர் மற்றும் நகர மன்றத் தலைவர் எஸ்.சௌந்தர்ராசன், நகர மன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி உயிரிழந்த 39 பேருக்கு மரியாதை செலுத்தினர்.

அஇஅதிமுக:
இதேபோல், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர கழகச் செயலாளர் அண்ணன் ஜே.கே.என். பழனி தலைமையில், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக, புரட்சி பாரதம் கட்சி, புதிய நீதிகட்சி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள், நகர மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மௌன ஊர்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகே 40 பேரின் ஆன்மசாந்திக்காக மவுன அஞ்சலி செலுத்தினர்.

✍️ கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்

By TN NEWS