Sun. Oct 5th, 2025



18-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய சங்கரராமன் – கோவில் தரிசனத்துக்கு தடை குற்றச்சாட்டு:

சாம்பவர் வடகரை, தென்காசி:
சாம்பவர் வடகரை அருள்மிகு ஸ்ரீ அங்களாபரமேஸ்வரி திருக்கோயில், செங்குந்தர் முதலியார் சமுதாயத்தாருக்கு பாத்தியப்பட்டு, பாரம்பரியமாக ஆண்டுதோறும் மாசி மஹா சிவராத்திரி விழா, மேலும் பிற மாதங்களில் சிறப்பு பூஜைகள் ஒவ்வொரு குடும்பத்தாராலும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், “நான்தான் கோவில் முக்கியஸ்தர்” எனத் தெரிவித்து, 18-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய சங்கரராமன், கோவிலை தனக்குள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும், காவல்துறை பேச்சு வார்த்தைகளுக்கு இணங்காமலும் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சங்கரராமன் தனது குடும்பத்தாரையும் சில ஆதரவாளர்களையும் சேர்த்து, சமீபத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையின் போது பொதுமக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தடுப்பதன் மூலம் அராஜகம் செய்தார் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சங்கரராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சாம்பவர் வடகரை காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

✍️ அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS