Mon. Oct 6th, 2025



வேலூர் மாவட்டம் குடியாத்தம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரையாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குடியாத்தம்-பரதராமி சாலையில், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ கருடா அன்னதானம் டிரஸ்ட் சார்பில் சுமார் 3,000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதான நிகழ்ச்சியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு, நடைபாதை பக்தர்களுக்கு உணவளித்து சேவை செய்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS