2016-17 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கில் நடிகர் விஜய் 35.42 கோடி ரூபாய் வருமானம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் புலி படத்திற்கான 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை கண்டறிந்தது.
இதையடுத்து, 2022 ஜூன் 30ஆம் தேதி, 1.50 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில் இன்று (செப். 23) விசாரணை நடந்தது. இரு தரப்பினரின் வாதங்களுக்குப் பிறகு, நீதிபதி சி. சரவணன் விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்