Thu. Jan 15th, 2026



தருமபுரி, செப்.17:

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் “ஓசோன் படலத்தை காக்க வேண்டும், இயற்கையை பேணிக் காக்க வேண்டும், நெகிழியை ஒழிக்க வேண்டும்” என்ற கருத்தை முன்னிறுத்தி உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் பழனிதுரை முன்னிலையில், அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து “ஓசோன் படலத்தை காப்போம், நெகிழியை ஒழிப்போம், உலகை காப்போம், இயற்கையை காப்போம், மரக்கன்றுகளை நடுவோம், மழைநீரை பெறுவோம்” என உறுதிமொழி எடுத்தனர்.

மேலும், ஒவ்வொரு மாணவரும் தங்களது தாயார் பெயரில் மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளத்தை மேம்படுத்தும் பணியில் பங்கேற்று, ஓசோன் படலத்தை காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

தமிழ்நாடு டுடே செய்தியாளர், பசுபதி

By TN NEWS