குடியாத்தம், செப்.17:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில், பாலாறு மற்றும் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் மணல் அகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் போடிப்பேட்டை பகுதியில் உள்ள கவுண்டன்யா மகாநதி ஆற்றில் இரவு பகலின்றி மணலை மூட்டைகளில் அடைத்து, இருசக்கர வாகனங்கள் மூலமாக கடத்தும் நடவடிக்கை நடைபெற்றது.
இந்நிலையில், குடியாத்தம் நகர போலீசார் சோதனை நடத்தி, மணல் திருட்டில் ஈடுபட்ட புவனேஸ்வரி பேட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (24), அருண் (23), கிருபாகரன் (21) ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர். இவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர், கே.வி. ராஜேந்திரன்