Mon. Oct 6th, 2025



உசிலம்பட்டி, செப்.17:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் திராவிடர் கழகம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. மேலும் “தமிழகத்திற்கு போராடிய தந்தை பெரியாரின் புகழ் வாழ்கவே, வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே” என முழக்கங்கள் எழுப்பி அவரது போராட்டச் சிந்தனைகளை நினைவு கூர்ந்தனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரியாரின் 147வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வரும் சூழலில், உசிலம்பட்டியிலும் உற்சாகமாக விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டச் செய்தியாளர்: வீர சேகர்

 

By TN NEWS