விழுப்புரம், செப்.17:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், பகுத்தறிவு பகலவன் ஈ.வெ.ராமசாமியின் 147வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையொட்டி, சுயமரியாதையுடனும், ஆளுமை திறனுடனும், பகுத்தறிவு கூர்மையுடனும் செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
நிகழ்வில் செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் முதன்மை செய்தியாளர்:
தமிழ். மதியழகன்