“தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” – கழக உடன்பிறப்புகள் ஒருமித்த உறுதி
சென்னை / செப்.15
தமிழக முன்னாள் முதல்வரும் பேரறிஞருமான அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உறுதியேற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஓரணியில் அண்ணா திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என்ற அண்ணாவின் அடையாளக் கோஷத்தை மீண்டும் உறுதி எடுத்ததாகக் கூறினார். மாநிலம் முழுவதும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கழகத்தினர் ஒருமித்த மனதுடன் உறுதிமொழி எடுத்தனர்.
சுரண்டை நிகழ்ச்சி
சுரண்டை நகராட்சிப் பகுதியில் நடைபெற்ற உறுதியேற்ற நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலாளர் கணேசன் தலைமையில்ச் செயல்பட்டனர். நகரின் 27 வார்டுகளிலும், 34 பூத்துக்களிலும் “ஒரே அணியில் தமிழ்நாடு” எனும் உறுதி மொழி கூறப்பட்டது.
இந்த நிகழ்வில் வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மகளிரணி உறுப்பினர்கள், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் முத்துக்குமார், நகர துணைச் செயலாளர் பூல் பாண்டியன், சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் செல்சிட்டி அல்லாபிச்சை, மரைக்காயர், செந்தில், பிஎஸ்என்எல் மாரியப்பன், சுசீலா, கவிதா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று உறுதிமொழி எடுத்தனர்.
மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்