Sun. Oct 5th, 2025



வேலூர் மாவட்டம், செப்டம்பர் 10:
பேரணாம்பட்டு பகுதியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த சம்பவத்தில், காவல்துறை இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பேரணாம்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபுக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார், பேரணாம்பட்டு–வீ.கோட்டா சாலையில் உள்ள எல்.ஆர்.நகரில் உள்ள ஒரு தனியார் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த வீட்டில் கூலிப், ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 82க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மேலும் விபரங்கள் பெற தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

📰 குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS