குடியாத்தம் காக்க தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மற்றும் அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக இன்று ஊட்டச்சத்து கண்காட்சி
செப்டம்பர் 10
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெற்றது
இதில் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன் அவர்கள் தலைமை வகித்து இன்றைய காலக் கட்டத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கை உணவு உண்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் என தெரிவித்தார்
சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட வித்யாலக்ஷ்மி கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ் அசோக்குமார் அவர்கள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் செய்த ஊட்டச் சத்து மிகுந்த இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு பண்டங்களை உண்டும் , அவற்றின் நன்மைகளை பற்றி அறிந்தும் , அவசர கால முதலுதவி சிகிச்சை பற்றி விளக்கம் அளித்ததையும் கேட்டு அறிந்தார். மேலும் சண்முகமுதலியார் விருதை முன்னாள் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் தங்கராஜ் அவர்களுக்கு வழங்கினார்
பின்னர் நோயற்ற வாழ இயற்கை உணவே சிறந்தது என சிறப்புரை ஆற்றினார். அத்தி கல்விக் குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் சௌ. சுகநாதன் அவர்கள் முன்னிலை வகித்து மாணவ மாணவிகள் இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு பொது மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என தெரிவித்துக் கொண்டார்.அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி , அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை , அத்தி மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி மற்றும் குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கா. குமரவேல் ஆகியோர் உடன் இருந்தார்கள்
அத்தி இயற்கை மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர் மாணவிகள் கலந்து ஊட்டச் சத்து கண்காட்சியில் நோய்களின் வகைக்கு ஏற்றவாறு உணவுகளை காட்சி படுத்தினர் .இதில் சுமார் 150 க்கு மேற்பட்ட ஊட்டச்சத்து உணவுகளை கண்காட்சியில் வைத்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்