Sun. Oct 5th, 2025

 



நோய் தொற்று அபாயம் – நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரில் கோபால சமுத்திரம் சுற்றுலா வாடகை வாகனங்கள் நிறுத்தும் பகுதியில், கழிவு நீர் ஓடை அடைப்பு காரணமாக கழிவு நீர் வெளிப்படுகிறது. இதனால் அந்த இடம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுப்புற மக்களும், சுற்றுலா பயணிகளும்அவதிப்படும் நிலை.

கழிவு நீர் தேங்கி கிடப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடத்தை சுத்தம் செய்யவும், கழிவு நீர் ஓடையைத் துரிதமாகச் சீரமைக்கவும் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள்: ராமர், திருச்சிராப்பள்ளி

By TN NEWS