Fri. Nov 21st, 2025





தென்காசி:
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த ராஜ சரஸ்வதி (69) என்ற மூதாட்டி, தன்னுடைய 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொன்னுத்துரை என்பவர் போலி பத்திரம் மூலம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து 2010 முதல் பல மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அங்கு இருந்தவர்கள் உடனே தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : அமல்ராஜ்
மாவட்ட தலைமை நிருபர் – தென்காசி


By TN NEWS