Tue. Aug 26th, 2025

தென்காசி:
சுரண்டை நகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அடிக்கடி தெருநாய்கள் தாக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சுரண்டை நகராட்சி தூய்மை பணியாளர் மேற்பார்வையாளர் முருகேசன், ஒரு பெண் தூய்மை பணியாளர் உள்ளிட்ட 10 பேரை தெருநாய்கள் கடித்தன. படுகாயமடைந்தவர்கள் சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பும் இதே பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் தெருநாய்களால் கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமூக ஆர்வலர்கள், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் பிரச்சனையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

செய்தியாளர் : அமல்ராஜ்
மாவட்ட தலைமை நிருபர் – தென்காசி

By TN NEWS