Thu. Aug 21st, 2025



குடியாத்தம், வேலூர் மாவட்டம் :
குடியாத்தம் ஆர்.எஸ். சாலை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சாம்பியன் உடற்பயிற்சி அரங்கம் இன்று (20.08.2025) காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட திமுக அவைத் தலைவர் முகமது சகி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அரங்கத்தை திறந்து வைத்தார்.

பின்னர்  அவர் – “இளைஞர்கள் ஆரோக்கியமாகவும் ஒழுக்கத்துடனும் வளர வேண்டும். உடற்பயிற்சி என்பது உடலை மட்டுமல்ல, மனதையும் வலுப்படுத்துகிறது. குடியாத்தத்தில் இவ்வாறான நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி அரங்கம் தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று” எனக் கூறினார்.

அரங்கில் நவீன பயிற்சி (Weight Training) கருவிகள், கார்டியோ உபகரணங்கள், யோகா மற்றும் உடல் வலுப்படுத்தும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, மாணவர்கள் மற்றும் வேலைக்கு தயாராகும் இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் ஆர். சஞ்சய், எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.ஆர். வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

புதிய உடற்பயிற்சி அரங்கம் துவங்கியிருப்பதால் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக அதிகம் பயன்பெறுவார்கள் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

செய்தியாளர்: K.V. இராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா


 

By TN NEWS