Thu. Aug 21st, 2025

வேலூர், ஆக.21 –
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி மற்றும் அக்ரவாரம் ஊராட்சிகளில், மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி. அமலு விஜயன் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.

முகாமில் வட்டாட்சியர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் குமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பத்மநாதன், கல்பனா குபேந்திரன், சேம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திமேஷ், அக்ரவாரம் ஊராட்சி மன்றத் தலைவர் முனிசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்டனர்.

பொதுமக்களும் அதிக அளவில் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

செய்தியாளர்: K.V. இராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா


 

By TN NEWS