குடியாத்தம், ஆக.21 –
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் அரைகூவலை ஏற்று, குடியாத்தம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று மாலை அஞ்சலக ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் தோழர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். சிறப்புரையாக மத்திய அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் தோழர் கே. ரகு, ஓய்வு பெற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் ஆர். சுப்பிரமணி, உதவி செயலாளர் கோபிநாதன், அஞ்சல்-3 செயலாளர் எழில் மாறன், அஞ்சல்-4 செயலாளர் தோழர் சிவக்குமார், அஞ்சல்-4 தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஊழியர்களின் உரிமைகள், சேவை நலன்கள் மற்றும் மத்திய அரசின் ஊழியர் கொள்கைகளை எதிர்த்து, தீர்வுகளை வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாழ்த்துரையை பல்வேறு சங்க நிர்வாகிகள் வழங்கினர். நன்றியுரையை அன்பழகன் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியர்கள் பங்கேற்று, கோஷங்கள் எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
செய்தியாளர்: K.V. இராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா.