Thu. Aug 21st, 2025



அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை – அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பல விருதுகள்:

அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரூர் சரக மட்ட தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தடகளப் போட்டிகள்:

ஜூனியர் பிரிவு

அபூபக்கர் – நீளம் தாண்டுதல் (1ம் இடம்), 100 மீட்டர் ஓட்டம் (2ம் இடம்), 200 மீட்டர் ஓட்டம் (3ம் இடம்).


சீனியர் பிரிவு

அப்துல் ரகுமான் – 110 மீ. தடை ஓட்டம் (1ம் இடம்), 200 மீ. ஓட்டம் (2ம் இடம்), உயரம் தாண்டுதல் (3ம் இடம்).

வெற்றிமாறன் – 100 மீ. ஓட்டம் (3ம் இடம்).

பிரவின் – போல் வால்ட் (1ம் இடம்), விசால் – (2ம் இடம்).

சிங்காரவேலன் – குண்டு எறிதல் (1ம் இடம்), சீனிவாசன் – (2ம் இடம்).

அரண் – நீளம் தாண்டுதல் (2ம் இடம்).

4 x 100 மீ. ரிலே – (3ம் இடம்).

அகிலன் – நீளம் தாண்டுதல் (3ம் இடம்), மும்முறை தாண்டுதல் (3ம் இடம்).

ஜெகதிஸ்வரன் – நீளம் தாண்டுதல் (2ம் இடம்).

தருண்குமார் – மும்முறை தாண்டுதல் (3ம் இடம்).



குழு விளையாட்டுகள்:

கால்பந்து – ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகள் – அனைத்திலும் முதல் இடம்.

ஆக்கி – ஜூனியர் பிரிவு (1ம் இடம்), சீனியர் பிரிவு (2ம் இடம்), சூப்பர் சீனியர் பிரிவு (2ம் இடம்).

வாலிபால் – (2ம் இடம்).


உட்புற விளையாட்டுகள்:

கேரம் – விக்ரம்பிரபு (1ம் இடம்).

சதுரங்கம் – தர்சன் (2ம் இடம்).

நேசிப்பது போட்டி – (2ம் இடம்).


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமையில் பரிசுகள், சான்றிதழ்கள், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மாணவர்களைப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் நல்லாசிரியர் பழனிதுரை, முருகேசன் ஆகியோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.

🖊️ பசுபதி
முதன்மை செய்தியாளர்.



 

By TN NEWS