Thu. Aug 21st, 2025

தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டி, பொன்னேரி, தீர்த்தமலை உள்ளிட்ட பல ஊராட்சிகளில், 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

இக்கூட்டங்கள் ஊராட்சி செயலாளர் முரளி சந்தானம் தலைமையில் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளர்கள், தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், கால்நடைத் துறை அலுவலர்கள், வாக்காளர் பெருமக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பினர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர்கள், ஆண்கள் சுயஉதவி குழுவினர்கள், ஊராட்சி மன்ற பணியாளர்கள் மற்றும் பல துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இறுதியில், “சாலை விதிகளை மதிப்போம் – உயிர் சேதம் தவிர்ப்போம்”, “சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டு சுகாதாரமாக வாழ்வோம்”, “மரம் வளர்ப்போம் – மழை பெறுவோம் – மழை நீர் உயிர் நீர்” என அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.

பசுபதி – தலைமை செய்தியாளர்


 

By TN NEWS