ஆதார் – சான்றா? சான்றில்லையா? முரண்படும் அரசு, உச்சநீதிமன்றம்:
குடியுரிமைக்கு எந்த ஆவணம்?
ஒரு குடிமகனின் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய உறுதியான ஆவணம் எது என்ற கேள்விக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை. அரசும், தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் – வழிகாட்ட வேண்டியவர்கள் தாமே மக்களைப் பந்தாடி வருகின்றனர்.
பிறப்புச் சான்றிதழின் சிக்கல்:
இந்தியாவில் 1970களில் தான் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
1990களுக்குப் பிறகே பள்ளி சேர்க்கைக்கு கட்டாயம் ஆனது.
1987ற்கு முன்பு பிறந்தவர்கள் பலருக்கு இன்று பிறப்புச் சான்றிதழே இல்லை.
அப்படியான நிலையில், குடியுரிமை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்றால், கோடிக்கணக்கான மக்கள் சிக்கிக்கொள்ள நேரிடும்.
பழைய ஆவணங்களின் நிலைமை:
1980 வரை வாக்களித்தவர்கள் பற்றிய ஆவணங்களை அரசு வெளியிட்டாலும், அவர்களின் பிள்ளைகள் குடியுரிமையை நிரூபிக்க முடியாத நிலை உள்ளது.
👉 வாக்குச் சீட்டு போட்டவர்களின் குடியுரிமை தானாகவே ஏன் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
செல்லாத ஆவணங்களின் பட்டியல்!
ஆதார் செல்லாது,
ரேஷன் கார்டு செல்லாது,
வாக்காளர் அடையாள அட்டை செல்லாது,
கடவுச்சீட்டு செல்லாது,
வங்கி கணக்கு புத்தகம், பான் அட்டை, ஓட்டுனர் லைசன்ஸ் – ஒன்றுமே செல்லாது.
அப்படியானால் எது தான் செல்லும்? மக்களை இவ்வளவு திண்டாடச் செய்வது ஏன்?
ஆதார் – சிக்கலின் மையத்தில்:
உச்சநீதிமன்றம்: “ஆதார் குடியுரிமைச் சான்று அல்ல” என்கிறது.
ஆனால் இதே நீதிமன்றம் முன்பு ஆதார் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து ஆதார் எடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
அரசு மற்றும் தனியார் துறைகள் அனைத்திலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டதன் காரணம் என்ன?
பள்ளிகளில் கூட இன்று மாணவர்களிடம் ஆதார் கேட்கப்படுவதன் காரணம் என்ன?
இவை அனைத்துக்கும் இதுவரை அரசு, நீதிமன்றம் உரிய விளக்கம் அளிக்கவில்லை.
மக்கள் கோரிக்கை:
👉 ஆதார் குடியுரிமைச் சான்று அல்ல என்றால், அது வேறு என்ன சான்று என்பதை ஒன்றிய அரசும் உச்சநீதிமன்றமும் வெளிப்படையாக விளக்க வேண்டும்.
👉 விளக்கம் தர முடியவில்லை என்றால், ஆதார் முறையே கைவிடப்பட வேண்டும்.
ஒத்துழையாமை இயக்கம் தேவைதானா?
மக்களைத் தவறாக வழிநடத்தும் இந்த நிலை தொடர்ந்தால், மக்கள் தாமாகவே “ஆதார் எடுக்க மாட்டோம், தரமாட்டோம்” என்ற ஒத்துழையாமை இயக்கத்தில் இறங்க வேண்டிய சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.
📌 முடிவாக:
“அரசுகள் தான் மக்களை முட்டாள்களாக கருதுகின்றனவா?
உச்சநீதிமன்றம் மக்களை கோமாளிகளாக கருதுகிறதா?” என்ற கேள்வி மக்கள் மனதில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
✍️ சேக் முகைதீன்
இணை ஆசிரியர்,
தமிழ்நாடு டுடே செய்திகள்.