திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நிலக்கோட்டை வட்டம் முசுவனூத்து கிராம பொதுமக்கள் அவசர மனு ஒன்றை சமர்ப்பித்தனர்.
அவர்களின் புகாரில், கிராம மக்கள் பயன்பாட்டிற்காக இருந்த பொதுநிலத்தை சில நபர்கள் சட்டவிரோதமாக வேலி மற்றும் கதவு அமைத்து ஆக்கிரமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் உரிமையை பறிக்கும் இந்த நடவடிக்கை, கிராம மக்கள் அன்றாட பயன்பாட்டிலும், சமூக நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி, அந்த இடத்தை மீண்டும் பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு டுடே, ராமர், திருச்சி மாவட்ட செய்தியாளர்