Tue. Aug 26th, 2025

பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் – கோவில்பட்டி நகராட்சி பெண் ஊழியர் கையும் களவுமாக கைது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி ஊரணித்தெருவைச் சேர்ந்த செல்வகுமார், தனது மனைவி காளிஸ்வரி பெயரில் வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்காக நகராட்சி அலுவலக வருவாய் பிரிவில் விண்ணப்பித்தார்.

இதற்காக வருவாய் உதவியாளர் நவீனா ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக செல்வகுமார் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வலையிட்ட நிலையில், செல்வகுமார் நவீனாவிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக நவீனாவை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் சரவணக்குமார்.

By TN NEWS