Tue. Aug 26th, 2025

தோழர்களே வாழ்த்துக்கள் 30/7/2025 காலை 9 மணிக்கு வேப்பமூட்டு பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. தோழர்கள் மாநில மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் மண்டல பகுதி பொறுப்பாளர்கள் அணி பொறுப்பாளர்கள் அத்தனை தோழர்களும் கலந்து கொண்டு ஆணவக் கொலைக்கு எதிராக உறுதி ஏற்போம் வாருங்கள் அன்புடன் மாவட்ட செயலாளர் அல் காலித்.

திருநெல்வேலி மாவட்டம் கே.டீ.சி. நகரில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த கவின் குமார் (26) என்பவர், சுர்ஜித் (23) என்பவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கவின் குமார் சிறப்பாக கல்வி கற்று, தங்கப்பதக்கம் வென்று, உயர்ந்த சம்பள வேலையில் இருந்த இளைஞர். சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்த அவரின் கனவுகளை முறியடித்தது.

இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியான சுர்ஜித், கல்வியறிவும், பொருளாதார வளமும் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் பெற்றோர் இருவரும் அரசு பணியில் எஸ்.ஐ.களாக பணிபுரிகிறார்கள்.

கவின் குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது, காவல்துறை அதிகாரிகள் சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளனர்.

இந்தக் கொலையால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் என்ன கற்பிக்கிறார்கள், எவ்வாறு வளர்க்கிறார்கள் என்ற சுயபரிசோதனை தேவை என்பதை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம், “பொருளாதார ரீதியான பொய்யான பெருமை உணர்வு – உயிர்களை பலிகொடுக்கிறது” என்பதை நினைவூட்டும் இன்னொரு இருண்ட நாளாக தமிழக வரலாற்றில் பதிந்துள்ளது.

ஜோ.அமல்ராஜ் – தென்காசி மாவட்டம் – தலைமை செய்தியாளர்.

By TN NEWS