*⭕⭕Breaking ஏமன் சிறையில் உள்ள நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது*
ஏமன் நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி எனும் நபரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், கேரளாவைச் சேர்ந்த மத போதகர் காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் தலையீடு நடத்தி நிமிஷா பிரியாவை காப்பாற்ற ஏமனில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புதல் அளித்ததாக கேரளா காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் அவர்களின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரத்த பணம் தொடர்பாக நடத்தப்பட்ட மற்ற விஷயங்களின் கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையே இந்த அறிவிப்பு வெளியான பிறகு மத்திய அரசு இதுவரை இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, அரசு முறை உத்தரவு அதிகாரப்பூர்வமாக ஏமன் அரசிடமிருந்து இந்திய அரசுக்கு கைமாற்றம் செய்த பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேக் முகைதீன் – இணை ஆசிரியர்.