கன்னியாகுமரி கடலின் மையத்தில் அமைந்துள்ள கண்ணாடி கூண்டு இழைபாலத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இதையடுத்து, இன்று (ஏப்ரல் 19) முதல் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அந்த பாலத்தில் சென்று கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் திரு.அழகு மீனா தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் சிறிய பராமரிப்பு பணிகள் காரணமாக, இந்த பாலத்தில் பொதுமக்கள் செல்ல தற்காலிகத் தடையிடப்பட்டிருந்தது. தற்போது அனைத்து பணிகளும் பூரணமாக முடிவடைந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த கண்ணாடி இழைபாலம், அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு அருகில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா பார்வையிடும் இடமாகும். மீண்டும் திறக்கப்படுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அமல்ராஜ் தென்காசி மாவட்டம்.
