திருப்பூர் ஏப் 14,,
பல்லடத்தில் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாள் விழா
இந்தியாவின் சட்டமேதையான அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக பல்லடம் பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி துணைத்தலைவர் K.M.கணபதி தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் கலந்து கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த சட்டமேதையான அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக சங்க நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
சாதி, இனம், மொழி என்கிற வரையறைகளைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கியொலிக்கும் குரலாய் ஒலித்தவர் அண்ணல் அம்பேத்கர். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய மிகப்பெரும் மேதை அண்ணல் அம்பேத்கர்.
இந்த நிகழ்வில் சங்க பொருளாளர் : G.ராஜசெல்வம், கூடுதல்செயலாளர்:R.ரமேஷ்குமார், இணைசெயலாளர் : G.நாகராஜ் , துணைசெயலாளர்கள் : K.சுரேஷ், S.காந்திமதி , அவைத்தலைவர்:K.சுப்பிரமணியம், பொதுக்குழுஉறுப்பினர்கள் : L.சித்திரைசெல்வி, K.பௌசிகாபேகம் , P.ரஞ்சிதா, V.ஜான் மெண்டோன்ஷா, செயற்குழுஉறுப்பினர்கள்: A.அர்ஜூனன், R.சிவக்குமார் , N.இராமசாமி, G.ஷோபனா , தாலுகா:பொறுப்பாளர்கள் திருப்பூர்தெற்கு : S.சரஸ்வதி, அவிநாசி : D.ஜானகிராமன் , பல்லடம் :R.சரஸ்வதி, காங்கேயம் :S.வெண்ணிலா, உடுமலைப்பேட்டை :D.அன்னல்ஆரோக்கியமேரி, மடத்துகுளம் : S.செல்வி, தாராபுரம் :R.பாலாஜி , மற்றும் மணிமேகலை, சஞ்சீவ், பொன்னுசாமி, முத்துலெட்சுமி, சரோஜினி, உதயகுமாரி, அருள்செல்வி, செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் சரவணக்குமார் – செய்தியாளர்.