Tue. Jul 22nd, 2025


தென்காசி: கடையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவல் ஆய்வாளர், ரூ.30,000 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேரி ஜெமிதா, பல்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர். பின்னர் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று, தற்போது தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஒரு கடத்தல் வழக்கில் சலுகை வழங்க ரூ.30,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த லஞ்ச ஒழிப்பு போலீசார், டிராப்-கேச் முறையில் பணம் பெறும் தருணத்தில் அவரை பிடித்து, கைது செய்தனர்.

முன்பும் குமரி மாவட்டத்தில் பணி செய்தபோது, பல்வேறு வழக்குகளில் ஒருதலைப்பட்ச செயல்பாடுகள், கட்டப்பஞ்சாயத்து நடத்தியது, லஞ்சம் பெற்றது போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தாலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற பழைய பின்னணியும் தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்படத் தொடங்கியுள்ளது.

பெண் காவல் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் கை வைத்திருப்பது, போலீசாரின் தரமும் நம்பிக்கையும் தொடர்பாக முக்கிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம் செய்தியாளர்

By TN NEWS