தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் சாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடை பெற்றது
தென்காசி மாவட்டம் அருள்தரும் உலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் சாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை Tamil Nadu அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடைபெற்றது. இது 19 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முக்கியமான நிகழ்வாகும். ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு, இனிதே புனித நீராட்டம் மூலம் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
விழா காலை 5 மணிக்கு பாத்ர பூஜை, தனபூஜை, பஞ்சகாவ்ய பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. பின்னர் காலை 8:30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் இடையின்றி நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர். விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு. கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரசாந்த் ஆகியோர் தலைமையில், காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
இந்த விழாவில் நிர்வாக செயல் அலுவலர் திரு. பொன்னி மற்றும் அறங்காவலர் குழுவினர் கலந்து கொண்டு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தனர். பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கும் பணியும் சிறப்பாக நடைபெற்றது.
மாநில அரசியல் முக்கியஸ்தர்களும் விழாவில் பங்கேற்றனர். அதில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். பழனி நாடார், சுரண்டை நகராட்சி சேர்மன் திரு. எஸ்.பி.என். வள்ளி முருகன், சுரண்டை அதிமுக நகரச் செயலாளர் சங்கர், அதிமுக தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வமோகன், தாஸ் பாண்டியன், நடுவே முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.
அமல்ராஜ்
தென்காசி மாவட்ட முதன்மை செய்தியாளர்.

