1). போக்குவரத்து விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்துவதற்கு காவல் அழைப்பு மையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட வாகன சிறு வழக்குகளுக்கான அபராதத் தொகை விதிக்கப்பட்ட நபர்களுக்கு அபராதத் தொகையை செலுத்த அறிவுறுத்துவதற்காக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் முதல் தளத்தில் 20.03.2025-ஆம் தேதி முதல் காவல் அழைப்பு மையம் (POLICE CALL CENTRE) துவங்கப்பட்டு அபராதத்தொகை விதிக்கப்பட்ட நபர்களை இந்த அழைப்பு மையத்திலிருந்து தொடர்பு கொண்டு அபராதத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வரப்படுகிறது. திருப்பூர் மாநகரில் அபராதத் தொகை விதிக்கப்பட்டு இதுவரை அபராதத் தொகையைச் செலுத்தாத வாகன ஓட்டிகள் இம்மையத்திலிருந்து அழைப்பு வந்தவுடன் மூன்று தினங்களுக்குள் அபராத நிலுவை தொகையினை செலுத்தி நீதிமன்ற நடவடிக்கையினைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய:
காவல் அழைப்பு மைய தொடர்பு எண்கள். 9498181175 மற்றும் 9498181078
சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம் செய்தியாளர்.