Tue. Jul 22nd, 2025

அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நுண்கலைக் குழுவின் நிறைவு விழா தின கொண்டாட்டம்.

சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நுண்கலைக் குழுவின் நிறைவு விழா இன்று (26.02.2025) சிறப்பாக நடைபெற்றது. நாட்டுப்புறக் கலைஞர் திரு. விஷ்வா பரத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழாவில் சிறப்புரை ஆற்றினார்.

இக்கல்லூரியில் கல்வி பயின்று, தங்கள் திறமையால் புகழ்பெற்ற முன்னாள் மாணவிகள் செல்வி பவித்ரா (செய்தி வாசிப்பாளர்), செல்வி திவ்யா விஜயகுமார் (சின்னத்திரை மற்றும் யூடியுப் நடிகை), செல்வி சுஷ்மா (நடன ஆசிரியை) ஆகியோரும் விழாவில் பங்கேற்று, மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கத்தில், கல்லூரி துணை முதல்வர் முனைவர் அனிதா இராமன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், மாணவப்புலத் தலைவர் முனைவர் அனிதா விழாவில் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

நுண்கலைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள், மாணவிகளின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் சிறப்பு இதழை வெளியிட்டனர். இதில் சிறப்பு விருந்தினர்கள் முதன்முறையாக இதழை வெளியிட்டு, நுண்கலைக் குழுவினருக்கு வழங்கினர்.

விழாவின் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவிகளுக்கிடையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதியில், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் அமைந்த சிறப்பாக நிகழ்வை மேலும் அழகு சேர்த்தன. விழா வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவடைந்தது.

சுதாகர் – வட சென்னை செய்தியாளர்.

By TN NEWS