Wed. Jul 23rd, 2025

ரெயிலில் தவறவிட்ட ₹3.5 லட்சம் மீட்ட சென்னை மாணவர்கள் – ரெயில்வே போலீசார் பாராட்டு!

அரக்கோணத்திற்கு அருகேயுள்ள மின்னல் பகுதியைச் சேர்ந்த மாதவன் (22), விக்னேஷ் (21), மற்றும் கைலாசபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (20) ஆகிய மூவரும் சென்னை நந்தனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் நண்பர்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தூத்துக்குடியைச் சேர்ந்த இஸ்மாயில் என்ற பயணி, சென்னை-மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரெயில் பேசின் பிரிட்ஜ் அருகே, இருவர் அவரது செல்போனை பறிக்க முயன்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் பயங்கர காயத்திலிருந்து தப்பினார்.

இதற்கிடையில், மாதவன், விக்னேஷ், ஜீவானந்தம் ஆகிய மாணவர்கள் ரெயிலில் செல்லும் போது, கதவு அருகே ஒரு பரிதாபமான நிலையில் கிடந்த பணப்பையை கண்டனர். திறந்து பார்த்தபோது, அதில் ₹3,50,000 இருந்தது.

நல்லொழுக்கம் மேலோங்கிய மாணவர்கள், உடனடியாக அந்தப் பையை அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர், ரெயில்வே பாதுகாப்பு படை (RPF) போலீசாரிடம் அது சமர்ப்பிக்கப்பட்டது.

பணத்தை தவறவிட்டதாக தூத்துக்குடியைச் சேர்ந்த பாதுல் அசாத் என்பவர் புகார் அளித்திருந்தார். அவரது மகன் இஸ்மாயிலுக்கே அந்த பணப்பை சேர்ந்தது என்பதை உறுதி செய்த RPF அதிகாரிகள், பணத்துடன் பையை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்களின் நேர்மையும் பொறுப்புணர்வும் பொதுமக்களிடையே பாராட்டுக்குரியதாக மாறியது. ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், இளைஞர்களின் நேர்மையான செயலைக் கவுரவித்தனர்.

**தமிழ்நாடு டுடே நிர்வாகம் இன்றைய இளைய சமுதாயத்தின் மாணவர்களின் செயலுக்கு பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.**

Vigneshwar

Student News Reporter.

By TN NEWS