திருப்பூர் ஜன 29,,,
*புகாரை திரும்பபெற கோரி கட்டபஞ்சாயத்து மூலமாக மிரட்டல் விடுத்து வருகின்றவர்கள் மீ்து சட்டரீதியாக நடவடிக்கை தேவை.*
*அரசு இடத்தை மீட்டெடுக்க அளித்த புகாரை திரும்ப பெறாததால் அவதூறு பரப்புவதோடு, வன்முறையை தூண்டும் வகையில் தவறான கருத்துகளை வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவதூறு செய்திகளை பதிவிட்டு வருகின்றவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியர் அலுவலகத்தில் ஈ.பி.அ.சரவணன் புகார்.*
*எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் மேற்படி அரசாங்க இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அப்புறப்படுத்தவது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது ஜனநாயக ரீதியாக உரிய தீர்வுகாணும் வரை ஓய்ய மாட்டோம் தொடர்ச்சியாக சட்ட போராட்டம் தொடரும் எந்த உருட்டல் மிரட்டலுக்கும் எதற்கு அடிபணிய மாட்டோம்.*
*அரசு இடத்தை மீட்டெடுக்க அளித்த புகாரை திரும்ப பெற கோரி தொடர்ச்சியாக மிரட்டி அச்சுறுத்தி அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவர்கள் கொங்கு வியாபார சங்க சக்திவேல் உள்ளிட்டவர்கள் மீது சட்டரீதியாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு மாநில இணை பொது செயலாளரும் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் நேரிடையாக புகார் மனு அளித்துள்ளார்.*
அதில் கூறப்பட்டுள்ளதாவது…..
சமூக ஆர்வலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் பகுதிகளிலுள்ள பொது மக்களுக்களுடைய குடிநீர், மின்சாரம், சாலை போக்குவரத்து போன்ற அத்தியாவசிய பிரச்சனைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாகிய நாங்கள் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வுகண்டு பொது மக்களுக்கு சேவை செய்வதால் எங்களுடைய உயிருக்கு உரிய பாதுகாப்பு இல்லை மேலும் காந்தி நகரிலுள்ள மாநகராட்சிக்குட்பட்ட இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கொங்கு வியாபார சங்க சக்திவேல் சிலரை கும்பலாக சேர்த்து கொண்டு எங்களுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக போலியான பொய்யான தவறான தகவல்களை கூறி எவ்வித அடிப்படை அடிப்படை ஆதாரமற்ற பொய் புகாரை அளித்தும் நான் அளித்த புகார் மனுவை திரும்ப பெற கூறி மிரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மேற்படி காந்தி நகரிலுள்ள அரசாங்க இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதில் தொடர்புடைய சிலர் தாங்கள் செய்த தவறுகளை மறைக்கவும் அரசு இடத்தை மீட்டெடுக்க புகார் அளிக்கப்பட்டாலும் இப்பிரச்சனையை திசைதிருப்ப வேண்டுமென சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு எவ்வித அடிப்படை ஆதாரங்கள் இன்றி வேண்டுமென்றே சிலர் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற தீய என்னத்தில் கொங்கு வியாபார சங்க சக்திவேல் உள்ளிட்டவர்கள் கட்டபஞ்சாயத்து மூலமாக எங்களுடைய பெயரை தவறாக பயன்படுத்தி தேவையில்லாத வீணான உண்மைக்கு புறம்பான பொய்யான வதந்தியை சமூக ஊடகங்களிலும் நேரிடையாகவும் பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருகின்றனர் இது தொடர்பாக சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த வாரம் போயம்பாளையத்தில் ரூ.10.கோடி மதிப்புள்ள அரசாங்க இடத்தை மீட்டெடுக்கப்பட்டு அரசு சொந்தமானது என போர்டு வைக்கப்பட்டது.
சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை அதற்கு எடுத்துக்காட்டு, புதுக்கோட்டையில், சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டது.
சமூகத்திலுள்ள அக்கரையுடன் புகார் மனு அளிக்கும் சமூக ஆர்வலர்களை மிரட்டி பணிய வைக்கும் விதமாக பொய்யான போலியாக புகார் அளித்து அச்சுறுத்தி வருகின்றவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை தேவை.
எங்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலும் தொடர்ந்து போராடி வருகிறோம் ஆனால் தவறு செய்யும் நபர்களால் எந்த நேரத்திலும் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது. இது ஒரு புறமென்றால், மறுபுறம் நியாயமான பிரச்னைக்காக அறவழியில் போராடும் எங்களுக்கு சிலர் பண பலத்தை கொண்டு அடியாட்கள் மூலமாக அச்சுறுத்தி பயம் காட்டி, வாய்ப்பூட்டுச் சட்டம் போடலாம் எனப்பார்க்கிறது.
இந்த நிலையில் காந்தி நகரிலுள்ள மாநகராட்சிக்குட்பட்ட இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கொங்கு வியாபார சங்க சக்திவேல் என்பவர் சிலரை கும்பலாக சேர்த்து கொண்டு கட்டபஞ்சாயத்து மூலமாக எங்களுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக போலியான பொய்யான தவறான தகவல்களை கூறி எவ்வித அடிப்படை ஆதாரமற்ற பொய் புகாரை அளித்தும் நான் அளித்த புகார் மனுவை திரும்ப பெற கூறி மிரட்டி அச்சுறுத்தி வருகின்றார்.
எங்களுக்கு மரணத்தைக் கண்டு பயம் இல்லை அநீதிக்கு எதிராக நாங்கள் நடத்தி வரும் போராட்டத்திலிருந்து எந்த சூழ்நிலையிலும் பின் வாங்க மாட்டோம் எனவே சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தட்டி கேட்கும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்
சமூக ஆர்வலர்களாகிய நாங்கள் திருப்பூரிலுள்ள பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டால் உரிய தீர்வு காணாமல் பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்க நீ யார் எனவும் புகார் அளிக்கும் நபர் குறித்து பிரச்சனை நடைபெற்ற சம்பந்தப்பட்ட வர்களுக்கு தகவல் தெரியப்படுத்தி தவறை சரி செய்யாமல் தகவல் தெரியப்படுத்தியவர்கள கட்சி பிரமுகர்கள், குண்டர்களை வைத்து மிரட்டுவதோடு அச்சுறுத்தி வருவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய தீர்வுகாண வேண்டும்..
திருப்பூரில் நடைபெறுகின்ற தவறுகளை தட்டி கேட்டு முதல்வர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதால் பழி வாங்க திட்டம் தீட்டி எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் என்னை எந்த நேரத்திலும் எந்த ரூபத்திலும் பழி வாங்க நினைக்கும் இவர்கள் மீ்து சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுடைய மீது எத்தனை பொய்யான போலியான தகவல்களை பரப்பினாலும் மேற்படி அரசாங்க இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அப்புறப்படுத்தவது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது ஜனநாயக ரீதியாக உரிய தீர்வுகாணும் வரை ஓய்ய மாட்டோம் தொடர்ச்சியாக சட்ட போராட்டம் தொடரும் எந்த உருட்டல் மிரட்டலுக்கும் எதற்கு அடிபணிய மாட்டோம் என்பதை தங்களுடைய மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூகத்தில் நடைபெறுகின்ற அநீதிகள் தொடர்பாக அரசிற்கு தொடர்ச்சியாக புகார் அளிக்கப்பட்டு வருவதால் எங்களுடைய பெயருக்கு களங்கள் ஏற்படுத்தும் விதமாக கொங்கு வியாபார சங்க சக்திவேல் உள்ளிட்டவர்கள் கட்டபஞ்சாயத்து மூலமாக மிரட்டி அச்சுறுத்தி பொய்யான தகவல்களை பரப்பி தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வன்முறைகளை தூண்டி அடியாட்களை ஏவி விட்டு கொலை செய்ய வேண்டி தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வருகின்றனர்.
எனவே தொடர்ச்சியாக அச்சுறுத்தி கட்டபஞ்சாயத்து செய்து வருகின்ற கொங்கு வியாபார சங்க சக்திவேல் உள்ளிட்டவர்கள் மீது சட்டரீதியாக ரீதியாக வழக்கு பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்களுடைய பொது பிரச்சனைகளுக்காக சமூகத்தில் பணியாற்றி வரும் சமூக ஆர்வலர்களாகிய எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கறோம் . இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்