









M. Shaikhmohideen
*’பத்ம பூஷன்’ விருது பெறும் நடிகர் அஜித் குமாரின் அறிக்கை*
“என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரின் வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார்.
என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும், நன்றி சொல்ல விரும்புகிறேன்.
கடந்த 25 ஆண்டுகளில் எனது அனைத்து சந்தோஷங்களிலும் வெற்றி களிலும் துணையாக இருந்த என் மனைவியும் தோழியுமான ஷாலினி எனது பக்கபலம்.
என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்தான் என் பெருமை மற்றும் என் வாழ்க்கையின் ஒளி”