Tue. Jul 22nd, 2025

குற்றாலத்தில் 17 வயது சிறுவர்களின் இருசக்கர வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த வாகனம் மோதியதில், ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக குற்றாலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையின் போது, சுரண்டை அருகே கீழவீராணத்தை சேர்ந்த முத்துபாண்டியன் மகன் அன்னராஜா (வயது 49), வேன் டிரைவராக இருந்தவர் கைது செய்யப்பட்டார். மேலும், தென்காசி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் காந்தி (வயது 59) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், “17 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், அவர்களின் பெற்றோர்கள் சட்டத்தின்படி கைது செய்யப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமல்ராஜ்,
மாவட்ட தலைமை நிருபர்,
தென்காசி.

By TN NEWS