உசிலம்பட்டி 10.01.2025
*பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.,*
வடலூரில் 08.01.2025 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.,
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் மதுரை தெற்கு மாவட்ட உசிலம்பட்டி வழக்கறிஞர் அணி சார்பில் திராவிட கொள்கையின் தந்தை என போற்றப்படும் தந்தை பெரியாரை இழிவாக பேசியதை கண்டித்தும், பேரறிஞர் அண்ணா, மு.கருணாநிதி மற்றும் இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்லாது, அதிமுக முதல்வர்கள் எம்.ஜீ.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்டோரை உருவாக்கி பெண் விடுதலை சமத்துவத்தை நிலை நாட்டி பல்வேறு முதல்வர்களை உருவாக்கி பெரியார் மீது தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.,
மேலும் திமுக தலைமையின் ஆலோசனை படி அடுத்தகட்டமாக பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.,
வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.


