உசிலம்பட்டி அருகே காணாமல் தேடப்பட்டு வந்த பள்ளி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தஷ்விக், உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் யூகேஜீ படித்து வருகிறார்.,
நேற்று வழக்கம் போல பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த இந்த மாணவன் வீட்டின் அருகே விளையாட சென்றதாக கூறப்படுகிறது, இரவு வரை வீடு திரும்பாத சூழலில் அக்கம் பக்கத்தில் உறவினர்கள் உதவியுடன் பெற்றோர் தேடி உள்ளனர்.,
இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்று பகுதியையும் தேட முடிவெடுத்து உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்த சூழலில், விரைந்து வந்த தீயணைப்புப் துறை வீரர்கள் இரவு முழுவதுமாக தேடி சிறுவனை பிணமாக மீட்டனர்.,
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
வீட்டின் அருகே விளையாட சென்ற சிறுவன் காணாமல் போனதும், காணாமல் தேடப்பட்ட சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,



வீரசேகர் மதுரை மாவட்டம் செய்தியாளர்