Mon. Jun 1st, 2026

கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் உணர்ச்சிமிகு பிரியாவிடை.

தேனி, மே 31:

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பணி நிறைவை முன்னிட்டு, நேற்று (மே 30) நடைபெற்ற பாராட்டு விழா நெகிழ்ச்சியும் மரியாதையும் நிறைந்த நிகழ்வாக அமைந்தது. கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்று தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.



அர்ப்பணிப்பு பணிக்கு பாராட்டு.

விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் நாகராஜன், பணி நிறைவு பெறும் அலுவலரின் கல்விச் சேவையைப் பாராட்டிப் பேசினார்.

கல்வி நிர்வாகத்தில் நேர்மையுடனும், மாணவர் நலனில் அக்கறையுடனும் செயல்பட்ட அவர், தேனி மாவட்ட கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார். அவரது ஓய்வுக்காலம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

மரியாதை செலுத்திய தலைமை ஆசிரியர்.

சின்னமனூர் ஶ்ரீ கிருஷ்ணய்யர் (SKA) மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டித்துரை, சந்தன மாலை அணிவித்து, சால்வை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி முதன்மைக் கல்வி அலுவலருக்கு மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய அவர், கல்வித்துறையில் சிறந்த வழிகாட்டியாக விளங்கிய அவரின் சேவையைப் பாராட்டி, எதிர்காலத்திலும் கல்வி மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் தொடர்ந்து தேவைப்படும் என்றார்.

நன்றியுரை ஆற்றிய முதன்மைக் கல்வி அலுவலர்.

பாராட்டுகளை ஏற்றுக்கொண்டு பேசிய முதன்மைக் கல்வி அலுவலர், தனது பணிக்காலத்தில் துணைநின்ற அனைத்து ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

பணி ஓய்வு என்பது பொறுப்புகளிலிருந்து விடுபடுவதே தவிர, சமூகப் பணியிலிருந்து விலகுவது அல்ல என்றும், கல்வித்துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பங்களிப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திய விழா!

இந்த நிகழ்வு கல்வித்துறையினரின் ஒற்றுமை, அன்பு மற்றும் பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு டுடே செய்திகளுக்காக
தேனி மாவட்ட தலைமை செய்தியாளர் – அன்புபிரகாஷ்

By TN NEWS