Mon. Jun 1st, 2026

வந்தவாசி, ஜூன் 1:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் நோக்கில் “மனிதம் அறக்கட்டளை” துவக்க விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முனைவருமான ச. உதயசங்கர் அவர்களின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, ஏழை மற்றும் விளிம்பு நிலையில் உள்ள பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கும் வகையில் கல்வி உதவிகளை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி முன்னேற்றமே இலக்கு.

விழாவில் பேசிய வழக்கறிஞர் ச. உதயசங்கர், “பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் பல திறமையான மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாத சூழல் நிலவுகிறது. அத்தகைய மாணவர்களை தேர்வு செய்து, அவர்களின் உயர்கல்விக்குத் தேவையான உதவிகளை வழங்கும் நோக்கில் மனிதம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

பல்வேறு துறையினர் பங்கேற்பு.

துவக்க விழாவில் ஓய்வு பெற்ற தொழிலாளர் ஆய்வாளர் பத்மநாபன், மருத்துவர் ஆர்த்தி, பேராசிரியர் ம. ரஜினி, அசோகமழை தாசன், குறும்பட இயக்குநர் வ. ரங்கநாதன், க. ஐயப்பன், ஆசிரியர் சதானந்தம், மருத்துவ ஊழியர் காளிதாஸ், வந்தை பிரேம், வழக்கறிஞர் கேசவராஜ், உடற்கல்வி இயக்குநர் கிருபானந்தன், செய்தியாளர் ராமமூர்த்தி, வழக்கறிஞர் யுவராஜ், சட்டக் கல்லூரி மாணவி கீர்த்திகா, ஆசிரியர் ரூபஸ் ராஜரத்தினம், பேராசிரியர் அகஸ்டின், பச்சையப்பன் கல்லூரி மாணவர் அவினாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சமூக அக்கறையுடன் புதிய பயணம்:

சமூகத்தில் கல்வி வாய்ப்புகளை சமமாக உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள மனிதம் அறக்கட்டளை, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

By TN NEWS