அரசு ஆணை விவரம்:
துறை: Public (Law Officers) Department.
அரசாணை எண்: G.O.(Ms.) No.353
தேதி: 26.05.2026
பொருள்: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜராக 17 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் (Civil Side) நியமனம்.
சென்னை உயர்நீதிமன்றம் (10 பேர்).
1. டாக்டர் ஆர். கௌரி
2. ஜி. தனா மாத்ரி
3. முகம்மது பயாஸ் அலி
4. எம். சிவவர்த்தனன்
5. எம். குருபிரசாத்
6. அமிர்தபூங்கொடி தினகரன்
7. கே. சதீஷ்
8. கே. சுரேந்தர்
9. டொமினிக் எஸ். டேவிட்
10. ஆர். சக்கரவர்த்தி
மதுரை உயர்நீதிமன்ற அமர்வு (7 பேர்)
11. பி. சரவணன்
12. எம்.பி. செந்தில்
13. ஆர். பார்த்திபன்
14. ஐ. பினய்காஷ்
15. எஸ். சிவசுப்ரமணியன்
16. எஸ். சிவ திலகர்
17. கே. போர்கொடி
இந்த வழக்கறிஞர்கள், நிரந்தர சட்ட அலுவலர்கள் நியமிக்கப்படும் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் சிவில் வழக்குகளில் ஆஜராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜராக 17 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் – அரசு ஆணை வெளியீடு.
சென்னை, மே 30:
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிவில் வழக்குகளில் ஆஜராக 17 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொது (சட்ட அலுவலர்கள்) துறை சார்பில் வெளியிடப்பட்ட G.O.(Ms.) No.353, நாள் 26.05.2026-ன் படி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 வழக்கறிஞர்களும், மதுரை உயர்நீதிமன்ற அமர்விற்கு 7 வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், நிரந்தர சட்ட அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படும் வரை இவர்கள் அரசின் சார்பில் வழக்குகளை நடத்துவார்கள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் மூலம் அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான சிவில் வழக்குகளை திறம்பட கையாளவும், நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் உதவும் என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷேக் முகைதீன் – இணை ஆசிரியர்
தமிழ்நாடு டுடே
