Sat. May 30th, 2026

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி காலமானார் – துபாயிலிருந்து அஜித் சென்னை வருகிறார்

சென்னை, மே 30:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், ரேசிங் ஸ்டாருமான அஜித் குமாரின் அன்புத் தாயார் மோகினி மணி (வயது 85) இன்று காலை சென்னையில் காலமானார்.

குடும்ப வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, அவர் முதுமை காரணமாக உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். துபாயில் தங்கியிருந்த நடிகர் அஜித், தாயாரின் மறைவுச் செய்தியை அடுத்து உடனடியாகச் சென்னை புறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகள் குறித்தான முழு விவரங்கள் விரைவில் குடும்பத்தினரால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோகினி மணியின் மறைவுக்கு திரைப்படத் துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர், தமிழ்நாடு டுடே

By TN NEWS