Thu. May 28th, 2026

குடியாத்தம், மே 28, 2026

கேரள மாநில முன்னாள் முதல்வர் தோழர் பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத்துறை (Enforcement Directorate) சோதனை நடத்தியதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் குடியாத்தத்தில் கடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் அமலாக்கத்துறையை எதிர்த்துப் போராடிய கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும் ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்ட விவரங்கள்:

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் தாலுக்கா குழு மற்றும் பேர்ணாம்பட் – குடியாத்தம் (தெற்கு) தாலுக்கா குழு சார்பில், இன்று (28.5.2026) மாலை 4.30 மணிக்கு குடியாத்தம் லட்சுமி திரையரங்கம் அருகில் நடைபெற்றது.

தலைமை மற்றும் பேச்சாளர்கள்:

தலைமை வகித்தவர்கள்:

· சி. சரவணன் – பேர்ணாம்பட் & குடியாத்தம் (தெற்கு) தாலுக்கா செயலாளர்
· எஸ். சிலம்பரசன் – குடியாத்தம் தாலுக்கா செயலாளர்

கண்டன உரை நிகழ்த்திய தோழர்கள்:

· செ. ஏகலைவன், கே. சாமிநாதன் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்)
· எம். அண்ணாமலை
· எஸ். கோட்டீஸ்வரன்
· ஜி. ரகுபதி
· ஆர். கோவிந்தராஜ்
· ஜி. சரத்குமார்
· ஐ. கார்த்திகேயன்
· ஆர். பாபு
· எம். ராஜா
· என். எஸ். பாஸ்கர்
· ஜி. சுப்பிரமணி

பங்கேற்றோர்:
கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கேரளாவில் அமலாக்கத்துறை நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் எனக் கண்டித்துப் பேசிய தலைவர்கள், உடனடியாகச் சோதனையை நிறுத்த வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

செய்தியாளர்: கே. வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா.

By TN NEWS